Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, November 11, 2019

16 ஆம் திகதி உருவாகும் அரசாங்கம் அரசியல்வாதிகளுக்கு சுகபோகமாக, இலகுவானதாக அமையாது. நன்றாக கஸ்டப்பட வேண்டி வரும். கடுமையாக உழைக்க வேண்டி வரும். - சஜித் பிரேமதாச


புனித ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று திங்கட்கிழமை (11) மாலை நீர்கொழும்பு நகர மத்தியில் மாபெரும் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
  கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளருமான வைத்தியர் காவிந்த ஜயவர்தன இந்த பிரசாரக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த  பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேக்கா, ரஞ்சன் ராமநாயக்க, ரவி கருனாநாயக்க, விஜித்தமுனி சொய்ஸா,  அர்ஜுன ரணதுங்க, சுஜீவ சேரசிங்க, காவிந்த ஜயவர்தன உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.


ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது,


நீர்கொழும்பில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான  தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சேதமடைந்த தேவாலயம் தொடர்பாக முதலில் எனது கவலையை தெரிவித்துக் கொள்கிறேன்.   அத்துடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற வகையில் நாட்டுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
 முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த, யுத்தத்திற்கு தலைமைத் தாங்கிய  சரத் பொன்சேக்காவை  எனது அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சராகவும் நியமிக்கவுள்ளேன். எனது தலைமையின் கீழ் பயங்கரவாதத்ததை முற்றாக ஒழிப்பேன் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதத்தை ஒழிப்பது போன்று போதை பொருள் வியாபாரத்தையும் ஒழிக்க வேண்டும், கப்பம் பெறுபவர்களையும் ஒழிப்பேன். அதேபோன்று கொலைகாரர்களையும் பெண்களை துஸ்பிரயோகம் செய்பவர்களையும் ஒழிப்பேன். ஓவ்வொரு வருடமும் பல்வேறு குற்றச் செயல்களை புரிந்தவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகின்றனர். பயங்கரவாதம் தொடர்பாக  தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கும், போதைப் பொருள், சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பாக பாலியல் குற்றம் புரிந்து தண்டனை பெற்று வருபவர்கனுக்கும் நிச்சயமாக நான் ஒருபோதும் பொது மன்னிப்பு வழங்கமாட்டேன்.











பொது மக்கள் தமது உரிமைகள் தொடர்பாக வீதியில் இறங்கி போராடும் போது எனது ஆட்சியில் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளபடமாட்டாது. அரச பயங்கரவாதம் எனது ஆட்சியில் இடம்பெறமாட்டாது என உறுதியளிக்கிறேன். சகல மக்களுக்கும் அவர்களுக்குள்ள உரிமைகளை வழங்குவேன்.
நீர்கொழும்பு மக்களில் அதிகமானவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். எனவே, நீர்கொழும்பில் சகல வசதிகiயும் கொண்டதாக மீனவ துறைமுகம் அமைத்துக் கொடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.  நான் அடுசிக்கு வந்தவுடன் சுற்றலாத்துறை ஏற்றுமதி தொழிற்துறையாக பிரகடனம் செய்யப்படும். இதன் காரணமாக ஏற்றுமதி தொழிற்துறைக்கு வழங்கப்படும் சகல சலுகைகளும் சுற்றுலாத்துறைக்கும் வழங்கப்படும். நீர்கொழும்பு நகரம் நவீன சுற்றுலாத்துறை நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். மீனவர்களுக்கான ஓய்வூதியம், விவசாயிகளுக்கான ஓய்வூதியம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.
பிரதமர், அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதாக இருந்தால் நாட்டுக்கு நன்மை பயக்கும் விடயங்ளை நாட்டுக்கு கொண்ட வரவேண்டும் இல்லையேல் அவர்களுக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது தடைவிதிக்கப்படும். மக்களின் வரிப்பணத்திலேயே அவர்கள் வெளிநாடு செல்கிறார்கள். எனவே வெளிநாட்டுப் பயணங்கள் நாட்டுக்கு நன்மை பயப்பனவாக அமைய வேண்டும். எனவே 16 ஆம் திகதி உருவாகும் அரசாங்கம் அரசியல்வாதிகளுக்கு  சுகபோகமாக, இலகுவானதாக அமையாது. நன்றாக கஸ்டப்பட வேண்டி வரும். கடுமையாக உழைக்க வேண்டி வரும். சுகபோக வாழ்க்கை வாழும் பிரிவினர் உருவாகுவார்கள். அவர்கள்  பொது மக்களாவர். இனிமேல் ஜனாதிபதி, பிரதமர்  உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  வாகன வரிச்சலுகை (DUTY FREE PERMIT ) வழங்கப்படமாட்டாது.
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளை காப்பாற்றும் ஜனாதிபதியா மக்களுக்குத் தேவை? நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக நானே வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தார்.





1 comment:

  1. We're looking for kidney donors in India or across Asia for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete