Animation

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, February 10, 2018

நீர்கொழும்பில் அரசியல் பிரமுகர்கள் வாக்களிப்பு

  இன்று நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் நீர்கொழும்பு மற்றும் கட்டானை பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் வாக்களித்தனர்.
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாந்து புள்ளே வெலிஹேன ரோமன் கத்தோலிக்க  சிங்கள வித்தியாலயத்தில் தனது தாயார் மற்றும் மகளுடன் சென்று வாக்களித்தார்.
நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரும் மேயர் வேட்பாளருமான ரொயிஸ் பெர்னாந்து நீர்கொழும்பு சாந்த ஜோசப் வித்தியாலயத்திலும்,  பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா தளுவகொட்டுவ சாந்த ஹானா வித்தியாலயத்திலும்

Tuesday, February 6, 2018

ஏப்ரல் மாதம் அனைத்து பாடசாலைகளிலும் உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக டெப் வழங்குவதற்கும் பாடசாலைகளுக்கு இலவச வைபை வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

நாங்கள் 2017ம் ஆண்டு நாடு முழுவதும் இலவச வைபை  வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தோம் இருப்பினும் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இத்திட்டம் பிற்போடப்பட்டது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அனைத்து பாடசாலைகளிலும் உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக  'டெப்' வழங்குவதற்கும் பாடசாலைகளுக்கு இலவச வைபை (WIFI) வழங்குவதற்கும் அடுத்த கட்டமாக நாட்டில் பல இடங்களில் இலவச வைபை வழங்குவதற்கும்; நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனது பிரஜா உரிமையை அவ்வளவு இலேசில் இல்லாமலாக்க முடியாது - முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

 எனது பிரஜா உரிமையை இல்லாமல் செய்வதாக கூறுகிறார்கள். அதனை அவ்வளவு இலேசாக செயய முடியாது. அதிவேக வீதிகளை நிர்மாணித்தமை , யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை, வீதி அபிவிருத்தி வேலைகளை செய்தமை, பாடசாலைகளை அபிவிருத்தி செய்தமை போன்ற பல்வேறு விடயங்களை  நான் மேற்கொண்டமை காரணமாகவா எனது பிரஜா  உரிமையை இல்லாமல் செய்யப் போவதாகக் கூறுகிறார்கள்? என்று  பாராளுமன்ற உறுப்பினரும்  முன்னாள் ஜனாதிபதியுமான  மகிந்த ராஜபக்ஷ கூறினார்.
கட்டுநாயக்காவில் திங்கட்கிழமை  (5-2-2018) மாலை  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

Saturday, February 3, 2018

சுதந்திர தினத்தையிட்டு நீர்கொழும்பு பள்ளிவாசலில் கொடியேற்றமும் பிராரத்தனையும்

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையிட்டு நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் தேசியக் கொடியேற்றம் மற்றும் விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.
ஜமாஅத்தின் தலைவர் முஸ்தாக் அஹ்மத் தiமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிவாசலின் நிருவாக சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Monday, January 29, 2018

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள்

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று திங்கட்கிழமை (29-1-2018) அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

படங்கள் - அணிகளுக்கிடையில் வலைப் பந்தாட்டப் போட்டி இடம்பெறுவதையும்,  போத்தலில் தண்ணீர் நிறைத்தல், பந்து போடுதல் போட்டிகள் இடம்பெறுவதையும் வலைப் பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற  அணிகளுக்கு அதிபர் எம். இஸட். ஷாஜஹான்  வெற்றிக்கிண்ணம் வழங்குவதையும், வெற்றி பெற்ற அணிகளுடன் அதிபர்

Thursday, January 25, 2018

அரிய வகை மூன்று கடல் ஆமைகளை பிடித்த இரு மீனவர்கள் துங்கல்பிட்டி பொலிஸாரால் கைது

அரிய வகை  மூன்று கடல்  ஆமைகளை பிடித்த   இரு மீனவர்களை நீர்கொழும்பு  துங்கல்பிட்டி பொலிஸார் இன்று புதன்கிழமை  (25)  அதிகாலை கைது செய்துள்ளதுடன் மூன்று ஆமைகளை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் துங்கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
முட்டை இடுவதற்காக கரைக்கு  வரும் ஆமைகளை சந்தேக நபர்கள் இறைச்சியாக்கி விற்பனை செய்வதற்காக பிடித்துள்ளனர்.
 கைப்பற்றப்பட்ட ஆமைகளில் இரண்டு பெண் ஆமைகளாகும். ஒரு ஆமை ஆண் ஆமையாகும். ஆமைகளில் ஒன்று காயம் காரணமாக இறந்துள்ளது.

Wednesday, January 17, 2018

நீர்கொழும்பு பிரதேச செயலகம் இந்து இளைஞர் மன்றத்துடன் இணைந்து நடத்திய தைப் பொங்கல் விழா

நீர்கொழும்பு பிரதேச செயலகம் நீர்கொழும்பு இன்று புதன்கிழமை (17) முற்பகல் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர் அலவத்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன்,  மன்றத்தின் முக்கியஸ்தர்கள், சர்வ மதத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sunday, January 7, 2018

பஸ்யால எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா எழுதிய 'இரண்டும் ஒன்று' கவிதை நூலின் வெளியீட்டு விழா

பஸ்யால எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா எழுதிய 'இரண்டும் ஒன்று' என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா கல்எளிய அலிகார் முஸ்லிம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (07.01.2018) நடைபெற்றது.

 நூலின் முதற்பிரதியை சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியையிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் நூலாசிரியரின் தந்தையும் முன்னாள்  அதிபருமான அல்ஹாஜ் ஏ.சி.செய்யது அஹமது பொன்னாடைப் போர்த்தி

Tuesday, January 2, 2018

புத்தாண்டு பிறப்பன்று அதிகாலை வேளையில் விசேட தொழுகையில் ஈடுபட்ட அஹ்மதி முஸ்லிம்கள்

புது வருட பிறப்பன்று நாடெங்கும்  உள்ள தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.
சற்று வித்தியாசமாக இலங்கையில் உள்ள அஹ்மதி முஸ்லிம்கள் புது வருட பிறப்பன்று அதிகாலை 4 மணியளவில்  பள்ளிவாசல்களுக்கு சென்று தஹஜ்ஜத் தொழுகையை நடத்தி பிரார்த்தனை புரிந்தனர். இதில் பெரும் எண்ணிக்கையான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Friday, December 22, 2017

நீர்கொழும்பு கட்டுவை ரயில் கடைவையில் காரின் மீது ரயில் மோதியதில் 16 வயது மாணவி பலி: மூவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் கட்டுவை ரயில் கடைவையில் கொழும்பு திசையை நோக்கி வந்து கொண்ருந்த ரயிலில்  காரில் மோதியதில் சிறுமி ஒருவர் மரணமாகியுள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (22) முற்பகல் 10.26 மணியளவில் கட்டுவை ரயில்வே கடைவையில் இடம்பெற்றுள்ளது.

Tuesday, December 12, 2017

33 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஜனாப் M.S.M. முனவ்வர்

நீர்கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய ஜனாப் M.S.M.. முனவ்வர் அவர்கள் 12.12.2017 அன்று தனது 33 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார். மாத்தறை வெலிகமையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஜனாப் மொகமட் ஸாலி ஜனாபா உம்மு றகுமா ஆகியோரின் சிரேஷ்ட புத்திரராவார்.
                இவர் தனது ஆரம்பக் கல்வியை வெலிகமை அறபா தேசிய பாடசாலையிலும், சாதாரண தரம், உயர் தரம் ஆகியவற்றை பேருவளை ஜமியா நழிமியாவிலும் பூர்த்தி செய்து, தனது பட்டப்படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்து,

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் நீர்கொழும்பு மாணவர்கள்

 கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று செவ்வாய்க்கிழமை  ஆரம்பமாகியது. நாடெங்கிலும்  அமைக்கப்பட்டுள்ள 5116 பரீட்சை  மத்திய நிலையங்களில் 688573 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

நீர்கொழும்பு கல்வி வலயத்தில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மற்றும் நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற செல்வதையும் பாடசாலைக்கு வெளியே

மணப் பெண் அலங்காரம் மற்றும் அழகுக் கலை பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களின் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு

மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் நிதி ஒதுக்கீட்டில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட  மணப் பெண் அலங்காரம் மற்றும் அழகுக் கலை பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களின் கண்காட்சி; பரிசளிப்பு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-12-2017) அன்று நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் கலந்து சிறப்பித்தார். கெரவ அதிதிகளாக வைத்தியர் ரிம்ஸீனா

Friday, December 8, 2017

ஹிலாலியன்ஸ் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் 500 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு

நீர்கொழும்பு வலயத்தில் உள்ள தமிழ், முஸ்லிம்,  சிங்களப் பாடசாலைகளைச் சேர்ந்த  வசதி குறைந்த 500 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களை  வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை  (7-12-2017) மாலை நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
சம் சம் பவுன்டேசன் (Zam  zam foundation)  நீர்கொழும்பு ஹிலாலியன்ஸ் நலன்புரி அமைப்புடன் (Hilalians charity org.) இணைந்து  School with a Smile Project    வேலைத்திட்டத்தின் கீழ்  இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

Wednesday, December 6, 2017

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா  இன்று  புதன்கிழமை (6-12-2017) பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட் சகோதரி எமலின் பிரதம அதிதியாகவும், அருட் சகோதரிகளான ஆன்மேரி, ஜுட், கிறிஸ்டா ஆகியோர் சிறப்பதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
  மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. ஆசிரியை எஸ். துண்யா டயனித்தா வரவேற்புரை நிகழ்த்தினார். பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையுரை நிகழ்த்தினார்.